

எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே சொல்லக் கூடியவர் ஸ்டாலின் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பில் அவர் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தின் மீது தி.மு.க-விற்கு நம்பிக்கை இல்லை என்றும், தி.மு.க-வின் வெளிநடப்பு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார்.