

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய சிதம்பரம், மனுநீதியை ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரிப்பதாக கூறினார்.