அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

மு.க ஸ்டாலின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகனை, சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகனை, சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். கருணாநிதி மறைவை அடுத்து, திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கட்சி வளர்ச்சி பணி, எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, அன்பழகனுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com