"சாத்தான் வேதம் ஓதுவது போல ஈபிஎஸ் பேசுகிறாரு" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

x

திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், சாத்தான் வேதம் ஓதுவது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித்குமாரின் குடும்பத்தாரிடம், நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னீக்ஸ் உடல்நலக்குறைவால் இறந்த‌தாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்றும், கூறியவர் தானே? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா? என்று ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்