Uttarakhand || நிலச்சரிவு அபாயத்தால் ருத்ரபிரயாக்கில் ஸ்தம்பித்த போக்குவரத்து

Uttarakhand || நிலச்சரிவு அபாயத்தால் ருத்ரபிரயாக்கில் ஸ்தம்பித்த போக்குவரத்து

Uttarakhand || நிலச்சரிவு அபாயத்தால் ருத்ரபிரயாக்கில் ஸ்தம்பித்த போக்குவரத்து உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.. அகஸ்தியமுனி பகுதிக்கு அருகே கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலையின் மேலுள்ள மலைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பிளவுகள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ​மேலும், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது... மலையிலிருந்து, பாறைகளும், மண்ணும் சரிந்து விழுவதால் போக்குவரத்து முடங்கி, பக்தர்கள் மற்றும் உள்ளூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com