செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 11 பேர் ஆந்திராவில் கைது

செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த 11 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 11 பேர் ஆந்திராவில் கைது
Published on
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயசோட்டி பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரி​ல் அவர்கள் நடத்திய சோதனையில், வீரபள்ளி சம்பேபள்ளி அருகே 20-க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கடத்துவதை கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் கற்களை வீசித் தாக்கியதாகவும், எதிர் தாக்குதல் நடத்தி அவர்களை பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட 11 பேரிடம் இருந்து ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பிலான 11 செம்மரகட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 11 பேரும், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 11 பேரையும் ராயசோட்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடப்பா சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com