BREAKING || ஆய்வில் இறங்கிய CM விஜய்... பரபரக்கும் தலைநகர் சென்னை-விசயம் தெரிந்து படையெடுத்த மக்கள்
கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் CM விஜய் இன்று ஆய்வு - பலத்த பாதுகாப்பு சென்னை கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மாலை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சர் வருகையை ஒட்டி ஒரு துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கோயம்பேடு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது நாள் ஒன்றுக்கு 4.5கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மாநகராட்சியின் பூங்கா பணி நெடுஞ்சாலை துறைக்கான கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு நான்கு புள்ளி ஐந்து கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடியாக சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையை ஒட்டி கோயம்பேடு பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் காவலர்கள் பாதுகாப்பு பணி ஈடுபட்டுள்ளனர் முதலமைச்சர் வருகையின் போது பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்கிற அடிப்படையில் சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு காலை முதலே போடப்பட்டுள்ளது. முன்னதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நெம்மேலி யில் உள்ள கடல் நீரை குடிநீர் ஆக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து சேத்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தை கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அந்த ஒரே மாதத்தில் மூன்று முக்கிய இடங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
