விபத்தில் சிக்கி வலியால் துடிதுடித்த இருவர்.. டாக்டர்கள் செய்த செயல்..அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

x

திண்டிவனம் பகுதியில் மழையின் காரணமாக மின் தடை ஏற்பட்ட நிலையில் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இருவர், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாததால், காயமடைந்த இருவருக்கும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் வேலை செய்யவில்லை என கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில்சிகிச்சையளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்