இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை | Northeast Monsoon | thanthi tv

x

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்