நாட்டிலேயே முதன்முறையாக சுகாதார உரிமை மசோதா தாக்கல் - மருத்துவர்களின் போராட்டத்தை மீறி நிறைவேற்றம்

x
  • நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • இதன்மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை பெற முடியும்.
  • விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர விரும்பிய எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பை மீறியும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மருத்துவர்களின் ஒரு பகுதியினர் நடத்திய போராட்டத்தை மீறியும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் ஆலோசனைகள், மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெற முடிவதுடன், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்.

Next Story

மேலும் செய்திகள்