தேவர் ஜெயந்தியில் கருணாஸ் அதிர்ச்சி அறிவிப்பு

x

தேவர் ஜெயந்தியில் கருணாஸ் அதிர்ச்சி அறிவிப்பு

பசும்பொன்னில், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டியதாக, கருணாஸ் கட்சியினரின் வைத்த பேனரை போலீசார் அகற்றினர். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில், முத்துராமலிங்க தேவர் மதுரை விமான நிலையம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையறிந்த கமுதி போலீசார், மதுரை விமான நிலையத்துக்கு மத்திய அரசோ, மாநில அரசோ பெயர் வைக்காத நிலையில், தன்னிச்சையாக பெயர் வைத்ததாகக் கூறி அந்த பேனரை அகற்றினர். இதற்கிடையே, தனது பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கருணாஸ் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்