ரேஷன் அரிசி வீணான விவகாரம் - ஈபிஎஸ்-க்கு உணவுத்துறை அமைச்சர் பதில்

ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் பேனைப் பெரிதாக்கி, பெருமாள் ஆக்கியது போல் அறிக்கை விட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
x

ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் பேனைப் பெரிதாக்கி, பெருமாள் ஆக்கியது போல் அறிக்கை விட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் பேனைப் பெரிதாக்கி, பெருமாள் ஆக்கியது போல் அறிக்கை விட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பகோணத்தில் 92 ஆயிரத்து 500 கிலோ அரிசி மட்டுமே வீணானதாக இந்திய உணவு கழகம் தெரிவித்தது என்று கூறியுள்ளார்.

அந்த அரிசியில் சேதமடைந்த அரிசி 5 புள்ளி 2 சதவீதம் இருந்ததாகவும், சேதமடைந்த அரிசி 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்று இந்திய உணவு கழகம் தெரிவித்ததாகவும் அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டுள்ளார்.

பேனைப் பெரிதாக்கி, பெருமாள் ஆக்கியது போல் 92 ஆயிரத்து 500 கிலோ என்பதை 9 லட்சம் டன் அரிசி என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளதாகவும்

உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்