அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

x
  • கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்பட்டது.
  • இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த‌து. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
  • இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • அதிமுக தலைமை விவகாரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்பதால், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்