சமீபத்திய செய்திகள்

Sathyamangalam | Elephant | திடீரென ரூட்டை மாற்றிய ஒற்றையன்.. இரவில் அலறி ஓடிய மக்கள்

திடீரென ரூட்டை மாற்றிய ஒற்றையன்.. இரவில் அலறி ஓடிய மக்கள்

thanthitv

Sathyamangalam | Elephant | திடீரென ரூட்டை மாற்றிய ஒற்றையன்.. இரவில் அலறி ஓடிய மக்கள் #elephant #Sathyamangalam #thanthitv சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த‌னர். அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்.. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் பகுதியில், இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென ஊருக்குள் நுழைந்து மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. காட்டு யானை சாலையில் நடமாடுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தோடு அலறி அடித்து ஓடினர். சாலையோரம் இருந்த பேக்கரியில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த பயணிகளும் யானை சாலையின் நடுவே நடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது தூரம் நடந்து சென்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்