Leopard | சிறுத்தை நடமாட்டம்? மரண பீதியில் மக்கள் - நள்ளிரவில் சிக்கிய CCTV#kallakurichi #Leopard #cctv கள்ளக்குறிச்சி மாவட்டம் பு.மாம்பாக்கம் கிராமத்தில், நள்ளிரவில் வீட்டின் வாசல் பகுதியில் சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரும்புத் தோட்டம் அருகே வசிக்கும் விவசாயி எழில் ராஜாவின் வீட்டில் பதிவான காட்சியில், கோழிக்கூண்டை மோப்பம் பிடித்தபடி அந்த விலங்கு சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது. வந்தது காட்டுப்பூனையா அல்லது சிறுத்தையா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விலங்கை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.