ரஷ்யாவில் குளிர்கால திருவிழாவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் இரண்டு பனி தரையில் குளிர் கால சாகசப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஐஸ் ஸ்கேட்டிங் நடனத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தை முன்னிட்டு, ஜொலிக்கும் மின்னொளி அலங்காரத்தில் இசை நிகழ்ச்சிகள் அரங்கேறின.