உலகம்

ஏழைகளின் ஹீரோவானகோமாளி - யார் இந்த டோனிபெரிஜில்?உலகம் கொண்ட காரணம்?

தந்தி டிவி

உலகின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாக கோமாளிகள் திருவிழா மாறி வருகிறது... தற்போது எங்கே நடந்தது? பார்க்கலாம் விரிவாக...பெரு நாட்டுல நடந்த கோமாளிகள் தினத்த பத்தி தான் இப்ப பாக்கப்போறோம்... இந்த திருவிழாவுக்கு பின்னணியா நெகிழ்ச்சியான கதை ஒண்ணும் இருக்கு...

பெரு நாட்டுல வசித்து வந்த டோனி பெரிஜில் Tony Perejil என்பவரது நினைவாக இந்த கோமாளிகள் திருவிழா ஆண்டுதோறும் நடக்குது... இவர் மக்கள குதூகலப்படுத்த கோமாளி வேஷம்போட்டு, தனது வருமானத்துல ஒரு பகுதிய ஏழைகளுக்கே கொடுத்திடுவாறு....

இதனால் ஏழைகளோட கோமாளின்னு, பெரு நாட்டு மக்கள் இவர அழைச்சாங்க... கடந்த 1987 மே 25-ம் தேதி டோனி பெரிஜில் உயிரிழந்ததுக்கு அப்புறம், அவரது நினைவா, வருஷா வருஷம் கோமாளிகள் திருவிழாவ மக்கள் கொண்டாடிட்டு வர்றாங்க....

வண்ண பூசிய முகங்கள், காஸ்ட்யூம், விதவிதமான விக்-னு, பெரு தலைநகர் லிமாவுல கண்கவர் பேரணி நடந்துச்சு... இதுல பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தொழில்முறை கோமாளிகள் கலந்துக்கிட்டு நிகழ்வையே வண்ணமயமாக்குனாங்க... ஆட்டம்-பாட்டத்தோட களைகட்டிய கோமாளிகள் திருவிழாவ குழந்தைகள் முதல் பெரியவங்க வரை உற்சாகமா கண்டுகளிச்சாங்க...

சோகமா இருக்கற மக்கள சிரிக்க வைப்பதுல தங்களுக்கு பெரும் பங்கு இருக்கறதா கோமாளி வேஷமிட்டவங்க சொல்றாங்க....மக்களிடையே மகிழ்ச்சிய மட்டுமே பரப்பி வந்த டோனி பெரிஜில், தனது இறுதி நாட்கள தனியாகவும், மருத்துவமனை படுக்கையிலும் கழிச்சது குறிப்பிடத்தக்கது....

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்