பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், அங்கு ஊரடங்கு உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மார்கெட் பகுதிகள் உள்ளிட்டவை அடுத்த இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றார்.