மீண்டும் பாகிஸ்தான் அதிபராவதற்காக அமெரிக்காவின் ரகசிய உதவியை முஷாரப் நாடிய ரகசிய வீடியோ அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தொகுப்புகளை கட்டுரையாளர் குல்புகார் என்பவர் கசிய விட்டுள்ளார். அதில் மீண்டும் பாகிஸ்தான் அதிபராக ஆவதற்கு ரகசிய ஆதரவு தர வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் சிலரிடம் முஷாரப் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருந்ததே இல்லை என அவர் வாதாடும் காட்சிகளும் மற்றொரு வீடியோவில் இடம் பெற்றுள்ளது.