ஈராக்கின், கர்பலா நகரில், கர்பலா போரில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் ஆஷுரா விழா நடந்தது. இதனையோட்டி நடைபற்ற பிரம்மாண்ட பேரணியில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 31 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர், 100 - க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.