உலகம்

Iran War | ஈரான் போரால் 5 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

Iran War | ஈரான் போரால் 5 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

thanthitv

ஈரான் போரால் 5 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து பாதிப்புகளால், சோமாலியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியத் துறைமுகத்தில் பல லட்சம் மதிப்பிலான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் முடங்கியுள்ளதால், சோமாலியாவில் உள்ள 5 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச மீட்புக் குழு எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் மோதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், போரினால் ஏற்பட்டுள்ள இந்த விநியோகச் சங்கிலி பாதிப்பு நிலைமையை மோசமாக்கியுள்ளது. கென்யாவிலிருந்து அவசரமாக மருந்துகளைத் திரட்ட மனிதாபிமான அமைப்புகள் முயன்று வருகின்றன. போரும், தட்டுப்பாடும் நீடித்தால், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும் என மருத்துவப் பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

CBI | High Court | டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு - சிபிஐ விசாரிக்க உத்தரவு

Karur Murder | கரூரை உலுக்கிய படுகொலை.. 19 வயது `மதுரை பாண்டி’ கைது

Madurai Chithirai Thiruvizha | தேரோடும் வீதியெங்கும் பக்தர்கள் தலை-மதுரையே அதிரும் ஹர ஹர சங்கர கோஷம்

Mamata vs BJP | வாக்குப்பதிவு நடக்கும் போதே பாஜகவிற்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை ஏவிய மம்தா

Koothandavar Temple | கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தேரோட்டம் - வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்