கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இக்னசியோ லோபஸ் என்ற நபர் எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று திரும்பியுள்ளார். தனது வளர்ப்பு நாயை விட்டுவிட்டு வந்த அவர், மீண்டும் அந்த பகுதிக்கு சென்று அதை மீட்டு கொண்டுவந்துள்ளார். உயிர் பயத்துடன் மக்கள் அலறியடித்து ஓடும் சூழலில் வளர்ப்பு நாய்க்காக உயிரை பணயம் வைக்க இக்னசியோ லோபஸ் முயற்சித்தது விலங்கு நல ஆர்வலர்களை கவனிக்க வைத்துள்ளது..