அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜார்ஜ் ஃபோர்மேன் George Foreman காலமானார். அவருக்கு வயது 76. கடந்த 1949ம் ஆண்டு டெக்சாஸில் பிறந்த ஜார்ஜ் ஃபோர்மேன், சிறு வயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர், ஜாப் கார்ப்ஸ் Job Corps முகாமில் குத்துச்சண்டையை முறைப்படி கற்றுக்கொண்டார். மெக்சிகோ சிட்டியில், கடந்த 1968ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், 2 முறை உலக ஹெவிவெயிட் பட்டத்தையும் வென்றுள்ளார்.