#trump #americanews அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக மார்க்வேன் முல்லின் நியமனம் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக ஒக்லஹோமா (Oklahoma) மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் மார்க்வேன் முல்லின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், தற்போதைய செயலாளராக பணியாற்றி வரும் கிரிஸ்டி நோயம், தனது பதவியில் சிறப்பாக பணியாற்றியதாகவும், குறிப்பாக எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக குறிப்பிடத்தக்க பலன்களை பெற்றுத் தந்ததாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார். மேலும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் கிரிஸ்டி நோயம் ஆற்றிய சேவைக்காக டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.