சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான பங்களிப்பு அளித்த அந்நாட்டு விஞ்ஞானி ஹுவாங் சுஹுவாவிற்கு, 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது. 94 வயதான ஹுவாங் சுஹுவா, தள்ளாடும் வயதிலும் தொடர்ந்து நாட்டின் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைவரது பாராட்டையும் குவித்து வருகிறார்.