சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர். இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு கடையில், வாடிக்கையாளர் நலன் கருதி கையை சுத்தம் செய்யும் திரவ பாட்டில் மற்றும் கை உறைகள் வைக்கப்பட்டு உள்ளன.