தற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அவர்களின் கவனத்திற்காக என கூறி இணையதளங்களில் ஒரு வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. அதனை தற்போது பார்க்கலாம்...
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சம்பந்தபட்ட நிறுவனம், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. "ஒருவர் செய்த தவறால் அனைவரும் அப்படி நினைப்பதா?"
உணவு டெலிவரி செய்பவர்கள் வேதனை :
இது ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ, ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதே துறையில் உள்ள நேர்மையான ஊழியர்கள் இச்சம்பத்தால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறாரகள்.