முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை காலை ஏழு மணிக்கு இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளனர். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின்படி, போட்டிக்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திருச்சி டி.ஐ.ஜி வரதராஜூ தலைமையில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் என நான்கு மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சைக்கிள்கள், பீரோ, கட்டில் மெத்தை, புல்லட் பைக்குகள், தங்கம் வெள்ளி நாணயங்கள் என பல பரிசுகளுடன் பிரம்மாண்டமாக போட்டி நடைபெற உள்ளது.