#virudhunagar #lorry #accident #thanthitv Virudhunagar Lorry Accident | மகன் கண்முன்னே லாரி டயரில் சிக்கி தந்தை பலி - அங்கும் இங்கும் ஓடி கதறிய மகன்.. அதிர்ச்சி சம்பவம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, தந்தை கண்முன்னே சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரை மீட்க மகன் கதறியபடி போராடிய சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது. வெள்ளூர் கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், மகன் அருண்பாண்டியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வடமலாபுரம் ஆத்துப்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சரக்கு லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த நாகராஜ் மீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகன் அருண்பாண்டி, லாரி சக்கரத்தில் சிக்கியிருந்த தந்தையை மீட்க கதறியபடி அங்கும் இங்கும் ஓடிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை திருத்தங்கல் போலீசார் தேடி வருகின்றனர்...