தமிழ்நாடு

விஜயகாந்த் குடும்பத்தாரிடம் மெகா மோசடி... ஏமாந்த சுதீஷ் மனைவி..! ஸ்கெட்ச் போட்டு சீட்டிங் செய்த கும்பல்

தந்தி டிவி

லோகா பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை கடந்த 10 வருடங்களாக நடத்தி வருபவர் சந்தோஷ் சர்மா... இவர், மாதவரத்தில் 234 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த கட்டுமானப் பணி நடைபெறும் இடம் தேமுதிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதிக்கு சொந்தமானது என்பதால், அதில், அவருக்கு 78 வீடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனிடையே, ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல், 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று 43 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக பூர்ணஜோதி தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் விசரணைக்குப் பிறகு, கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இருவரையும் வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, வீடுகள் கட்டிக் கொடுப்பதாக 211 பேரிடம் 172 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்

Breaking | T20 | Ind Vs Eng | Ind Vs Eng - வாழ்வா - சாவா..? டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு