தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நாகையில் அண்ணா சிலை சந்திப்பில் விஜய் உரையாற்றுகிறார். வரும் வழியில் கூட்ட நெரிசல் இருந்தால் மாற்று வழியாக நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் பகுதி வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகையில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, சிக்கல்- கீழ்வேளூர் பைபாஸ் வழியாக விஜய் திருவாரூர் சென்றடைகிறார்.