தமிழ்நாடு

மழை வேண்டி கழுதைகளுக்கு நடந்த திருமணம்...

திருச்சி அருகே மழை வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைத்தனர்.

தந்தி டிவி

* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வத்த மணியாரம்பட்டியில் நடந்த திருமண நிகழ்வு அப்பகுதி மக்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

* காரணம் வெகு விமரிசையாக கழுதைகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை வேண்டி நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்வில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடித் தீர்த்தனர்.

* பட்டு வேட்டியில் வந்த மணமகனுக்கும், பட்டு புடவை போர்த்தி வந்த பஞ்ச கல்யாணிக்கும் தங்கத் தாலி எடுத்துக் கொடுத்து கெட்டி மேளம் கொட்ட திருமணம் நடந்தது.

* அட்சதை தூவி மணமக்களை வாழ்த்திய மக்கள், பாரம்பரிய நிகழ்வான தேவராட்டத்தையும் ஆடி மகிழ்ந்தனர். நம் வீட்டு திருமணம் போலவே பாவித்த மக்கள், மொய் விருந்தையும் நடத்தி அமர்க்களப்படுத்தினர்.

* இந்த திருமணத்திற்காக பல கிராம மக்களும் ஒன்று கூடியது நிகழ்வின் சிறப்பாக அமைந்தது. மொத்தத்தில் பஞ்ச கல்யாணிக்கு நடந்த திருமணத்தால் அந்த ஊரே திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்