திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக 94 லட்சம் ரூபாயும், ஒரு கிலோ தங்கம் மற்றும், 4 புள்ளி 49 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், 234 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்க பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது