தமிழ்நாடு

ஐ.ஆர்.டி.சி போன்று போலி இணையதளம்..மர்மகும்பல் செய்த பகீர் காரியம்

தந்தி டிவி

ஐ.ஆர்.டி.சி போன்று போலி இணையதளங்கள் உருவாக்கி, தனியார் நிறுவன மேலாளரிடம் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டி, ரயில்வே இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ரீதரன் ஊருக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் ரயில்வே இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். ஆனால் டிக்கெட் ரத்து செய்ததற்கான பணம் வராததால், இதுதொடர்பாக வாடிக்கையாளர் பாதுகாப்பு சேவையை அவர் அணுகியபோது, எதிர்முனையில் பேசிய நபர், கிரெடிட் விவரங்களைக் கேட்டு போனை துண்டித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்ரீதரனின் செல்போன் எண்ணில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்