திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு , வாகனங்களை வழிமறித்த பாபு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆய்வுக்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால்
ஆத்திரமடைந்த பாபு தகராறில் ஈடுபட்டதையடுத்து அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அது குறித்த வீடியோ இணைய தளத்தில் பரவியதால் பாபுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.