அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில், சுமார் 50 ஆயிரம் மூட்டைகள், மழையால் நாசமானதாக, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதாசுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மே 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.