கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் தமிழக சட்டப்பேரவை தற்காலிகமாக கலைவாணர் அரங்கில் இன்று கூடியது. உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் 23 பேரின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளை பேரவை தலைவர் தனபால் வாசித்தார்.