திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை, பழவேற்காடு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு பழவேற்காடு மீனவர்கள் கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத்திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் அதானி துறைமுகம் வேண்டாம் என வாசகங்கள் அடங்கிய முகக்கவசங்கள் அணிந்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். துறைமுக விரிவாக்கத்தால் மீன்வளம் அழிந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.