திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சந்தோஷ், முருகேஷ்வரி என்பவரோடு கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சந்தோஷ் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத நிலையில் சந்தோஷின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முருகேஷ்வரியை விசாரணை செய்தனர். அப்போது சந்தோஷ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததன் காரணமாகவும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாலும் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்து எரித்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதனையடுத்து எலும்புகளை பறிமுதல் செய்த போலீசர் குற்றவாளிகள் 3 பேரை சிறையில் அடைத்தனர்.