தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பள்ளி வளாக சுற்றுச்சுவரில் 3 மாணவிகள் குறித்து அவதூறாக எழுதப்பட்டதை கண்டு மனமுடைந்து இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த 3 மாணவிகளையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிரியர்கள் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 3 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்