திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பு, கடல் சுமார் 75 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. நாழிக்கிணறு முதல் செல்வ தீர்த்தம் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு பாசிப்படிந்த பாறைகள் தென்பட்டன. இதனை பார்ப்பதற்காக வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் பாறைகளின் மீது நின்று செல்பி எடுத்தும், சிலர் அங்கு நீராடியும் மகிழ்ந்தனர்.