தமிழ்நாடு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளை - கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை குன்றத்தூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணய்யா வீட்டில் கடந்த வாரம் புகுந்த மர்மநபர்கள் நகை, டிவி உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட ஓட்டேரியை சேர்ந்த முருகன், செல்வம், பிரான்சிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பகல் நேரங்களில் வெவ்வேறு வேலைகளில் ஈடுபடும் இவர்கள், இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில், ஆட்டோவில் சென்று திருடுவதை வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்று கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 7 சவரன் நகை, பித்தளை பாத்திரங்கள், ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் சிறையில் அடைத்தனர்.

PM Modi | Uzbekistan | உஸ்பெகிஸ்தானில் இருந்து மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட PM மோடி

NEET PG Exam Issue | நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல்..தேர்வு மையத்திலேயே மாணவர்கள் போராட்டம்

Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி