கரூர் அருகே, டியூசன் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற 10ம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன், திடீரென மாயமானதால், இதுகுறித்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், வடக்குப் பாளையம் கிராமத்தில் விவசாய கிணற்றிற்கு அருகில் மாணவனின் காலணிகள் கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடியதில் மாணவனின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.