தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் அருண். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் தன் நண்பர்களோடு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் 3 பேரும் சேர்ந்து அருணை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.