இந்தியப்பெருங்கடல் மற்றும் தீபகற்ப பிரதேசத்தின் புவி அரசியல், முக்கியத்துவம் அதிகரித்து வரும் பின்னணியில், தஞ்சாவூர் விமானபடைத்தளம் முக்கிய இடத்தை பெறுகிறது
கடற்கொள்ளை, பயங்கரவாத அச்சுறுத்தலை எந்த நேரமும் எதிர்கொள்ள இந்த தளம் துவக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் கண்காணிப்பு பணிக்கு வீரர்கள் செல்ல இந்த விமான தளம் உறுதுணையாக உள்ளது.
புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் தளமாக இந்த விமானப்படை தளம் விளங்க உள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.