தமிழ்நாடு

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் பெருக்கெடுத்து செல்கிறது.

* இந்நிலையில் கல்லணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூதலூர் அருகே புதுக்குடி, மனையேறிபட்டி, செங்கிப்பட்டி கிராமங்களுக்கு மாயனூரில் இருந்து கட்டளைக் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

* ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்து சேராததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

* ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை எனவும், வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே தண்ணீர் வராததற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்