தமிழ்நாடு

சத்துணவு முட்டை கொள்முதலுக்கு புதிய டெண்டர் - தமிழக அரசு

ஆகஸ்ட் 24 காலை 11 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தந்தி டிவி

* சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

* இதையடுத்து, சில தினங்களுக்கு முன், மீண்டும் முட்டை கொள்முதலுக்கான டெண்டர் கோரப்பட்டது. அதில், புகாருக்கு ஆளான நிறுவனங்களும் பங்கேற்றதால், யாருக்கும் டெண்டர் விடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

* இந்நிலையில், தற்போது மீண்டும் டெண்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒரு வருடத்திற்கான முட்டை விநியோகம் செய்ய விரும்புவர்கள், 30

ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி டெண்டர் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

* பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, ஆகஸ்ட் 24ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு டெண்டர் விடும் பணி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக