தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

தந்தி டிவி

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த ஊரில் வாக்களித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே நர்சரி பள்ளியில், ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் அமைத்துள்ள 104 வது வாக்குச்சாவடியில் தனது மனைவி சரஸ்வதி அம்மாள் மற்றும் குடும்பத்தினருடனும் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அங்கனூர் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், மக்களோடு மக்களாக வரிசையில் நின்றிருந்தார். பின்னர், வாக்காளர் பட்டியலில் விவரம் சரிபார்த்த பிறகு, தனது வாக்கை திருமாவளவன் பதிவு செய்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கீழ்பாக்கம் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வாக்களித்தார். தனது இல்லம் அருகே உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், தனது மனைவியுடன் வந்து பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முத்தரசன் வாக்களித்தார். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், சிறிது நேரம் காத்திருந்து அவர் தனது, ஜனநாயக கடமையை ஆற்றினார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, ஓட்டு போடும் உரிமையை நிறைவேற்றினார். பின்னர் தனது தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் வாக்குச்சாவடியில் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு