தமிழ்நாடு

செம்மரம் வெட்ட வந்ததாக 4 பேர் கைது : நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க முடிவு

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பதி அடுத்த சந்திரகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தமிழகத்தில் இருந்து ஆந்திர நோக்கி சென்ற பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த துரைராஜ், முனுசாமி,ராஜா, ராம்குமார் ஆகிய 4 பேரும் கோடாரி,அரிவாளுடன் இருந்ததால், செம்மரம் வெட்ட வந்திருப்பதாக கருதி 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் அவர்கள் வனப்பகுதிக்குள் செல்லாததால் நல்லெண்ண அடிப்படையில், அவர்களின் உறவினர்களை வரவழைத்து திருப்பதி தாசில்தார் முன்னிலையில் விடுவிக்கவுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்