தமிழ்நாடு

நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெல்லம் மற்றும் மூலிகை சர்க்கரை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதையடுத்து அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர்14 ஆண்டுகளாக மூலிகை சர்க்கரையை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கரும்பு சாறுடன் சுக்கு, ஏலக்காய், மிளகு, அதிமதுரம் உள்ளிட்ட 12 வகையான மூலிகைப்பொருட்களை சேர்த்து மூலிகை சர்க்கரை தயார் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள், இனிப்பாக உரிமையாளர்கள், சிறுதானிய தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மூலிகை சர்க்கரை மற்றும் நாட்டு சக்கரையை அதிக அளவில் வாங்கிச்செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை